ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கர்நாடகத்தில் ஜூன் 14 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா வியாழக்கிழமை அறிவித்தார்.

News image
Updated On :3 ஜூன் 2021, 12:12 pm

கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா வியாழக்கிழமை அறிவித்தார்.

கர்நாடகத்தில் விதிமுடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக வியாழக்கிழமை மாநில முதல்வர் எடியூரப்பா தலைமையில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாகத் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

முன்னதாக மே 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு ஜூன் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராதததைத் தொடர்ந்து ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுமுடக்க நீட்டிப்பில் மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை 26,35,122 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.