கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஹைதராபாதில் உள்ள பல தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் உடல்ரீதியாக மட்டுமின்றி பொருளாத ரீதியாகவும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது மத்திய-மாநில அரசுகளால் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
இதனால், பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு 40 முதல் 50 சதவீத ஊதியம் கொடுத்த வந்தனர். இந்நிலையில் பல சிறிய தனியார் பள்ளி நிர்வாகத்தினரால் கட்டட வாடகை, ஊதியம் மற்றும் பிற செலவுகளை செய்ய முடியாமல் பள்ளிகளை மூடி வருகின்றனர்.
இதுகுறித்து பாண்ட்லகுடா பகுதியில் உள்ள எம்.கே உயர்நிலைப் பள்ளி நிர்வாகி சையத் அஸ்லம் கூறுகையில்,
6 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 60-70 சதவீத ஊதியத்தை வழங்கி வருகின்றோம். இதில், 30 சதவீத மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர், பலரின் வீட்டில் ஸ்மார்ட் போன் இல்லை. எங்கள் பள்ளி குடிசைப் பகுதியில் அமைந்து உள்ளதால் பெற்றோர்களிடம் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்த முடியாது.
பள்ளியில் உள்ள 18 ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியத்தை வழங்கினோம், பின்னர் பள்ளிக்கு வருமானம் இல்லாததால் இணையவழி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே ஊதியம் தருகின்றோம். பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது இது பூஜ்ஜிய கல்வியாண்டாக அறிவிக்கப்படுமா என்பதும் எங்களுக்குத் தெரியாது. இந்த நிலைமை தொடர்ந்தால், நாங்களும் பள்ளியை மூடிவிட்டு வேறு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என கூறினார்.
தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கே இந்த நிலைமையெனில், மாதம் 3 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஊதியம் வாங்கும் ஆசிரியர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக ஹைதராபாத் மற்றுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் தவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


