சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

உலகளவில் 58 சதவீத இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளம் பெண்களில் 58 சதவீதம் பேர் பாலியல் தொந்தரவை சந்திப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

News image

உலகளவில் 58 % இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு

Updated On :6 அக்டோபர் 2020, 10:18 am

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளம் பெண்களில் 58 சதவீதம் பேர் பாலியல் தொந்தரவை சந்திப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சிறுமிகளுக்கான உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காக செயல்படும் தனியார் தொண்டு நிறுவனமான பிளான் இன்டர்நேஷனல், சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு நடத்திய கணக்கெடுப்பில் இணையதளம் உபயோகிக்கும் பெண்களில் 58 சதவீதம் பேர் பாலியல் தொந்தரவை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளனர்.

இந்த கணக்கெடுப்பானது, பிரேசில், இந்தியா, நைஜீரியா, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்பட 22 நாடுகளில் உள்ள 15 முதல் 25 வயதுடைய 14 ஆயிரம் இளம் பெண்கள் இந்த ஆய்வில் வாக்களித்துள்ளனர்.

அதில் அதிகபட்சமாக சமூக ஊடகங்கள் வாயிலாக முகநூலில் 39 சதவீதமும், அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் 23 சதவீதமும், வாட்ஸ்அப் 14 சதவீதமும், ஸ்னாப்சாட்டில் 10 சதவீதமும், ட்விட்டரில் 9 சதவீதமும் மற்றும் டிக்டாகில் 6 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்மூலம், இளம் பெண்களில் ஐந்தில் ஒருவர் சமூக ஊடகங்களை உபயோகிக்கும் பழக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் ட்விட்டரில் ஏற்படும் இதுபோன்ற பாலியல் பிரச்னைகளை சந்திக்கும் பெண்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி உலகம் முழுவதும் ஏற்படும் பாலியல் முறைக்கேட்டை வெளிப்படுத்த வேண்டும் என பிளான் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாகி, அன்னே-பிர்கிட் ஆல்பிரெக்சென் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.