ஸ்ரீபெரும்புதூர் தனியார் மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை இல்லை எனக் கூறி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிக்கராயபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ள கரோனை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பூந்தமல்லி குன்றத்தூர் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தனியார் மருத்துவமனைகளிலும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள தனி வார்டுகளிலும் சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதே போல் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 300 படுக்கைகள் வசதிகள் கொண்ட தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு காஞ்சிபுரம் மாவட்டதிற்குட்பட்ட குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 160க்கும் மேற்பட்ட கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த தனியார் மருத்துவமனையில், உணவு, கழிவறை வசதிகள் இல்லை, குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை, தண்ணீர் வருவதில்லை, முறையாக மருந்துகள் வழங்கவில்லை என குற்றம்சாட்டி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து பூந்தமல்லி குன்றத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி உதவி ஆணையர் செம்பேடுபாபு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மருத்துவமனைக்குள் சென்றனர்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பூந்தமல்லி குன்றத்தூர் சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


