மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

20 மாநிலங்களுக்கு 122 பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைவு: தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர்

​20 மாநிலங்களுக்கு 122 பேரிடர் மீட்புப் படை குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.

News image

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 122 குழுக்கள் 20 மாநிலங்களுக்கு விரைந்தன

Updated On :23 ஜூலை 2020, 10:56 am


20 மாநிலங்களுக்கு 122 பேரிடர் மீட்புப் படை குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: 

"தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 122 குழுக்கள் 20 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் அசாம் மாநிலத்திற்கு 16 குழுக்களும் பிகார் மாநிலத்திற்கு 21 குழுக்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பருவமழையில் இயல்பை விட அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பிகார் மற்றும் அசாம் மாநிலங்கள் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கியமான பகுதிகளாக இருக்கின்றன.

பிகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் தெராய் பிராந்தியத்தில் பெய்யும் மழையைப் பொறுத்தது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பேரிடர் மேலாண் மீட்புக் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிபிஇ உடை அணிந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

தற்போது நாங்கள் இரு சாவால்களை எதிர்கொண்டு வருகிறோம். ஒன்று வெள்ளப்பெருக்கு, மற்றொன்று கரோனா. ஒரே நேரத்தில் இரு பெரும் இயற்கை பேரழிவைச் சந்தித்து வருகிறோம். தற்போது கோசி, கந்தக், கமலாபனல், மஹானந்தா ஆகிய நதிகள் ஆபத்து கட்டத்தை கடந்து இயல்பு நிலைக்கு திரும்புகின்றன." என்றார் பிரதான்.

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் 30 மாவட்டங்களில் 89 பேர் பலியானதாகவும், 56,27,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.