மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சத்தீஸ்கரில் கடந்த 3 ஆண்டுகளில் 216 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் கடந்த 3 ஆண்டுகளில் 216 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 966 பேர் சரணடைந்துள்ளதாகவும் மாநில அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :23 டிசம்பர் 2020, 11:01 am

சத்தீஸ்கரில் கடந்த 3 ஆண்டுகளில் 216 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 966 பேர் சரணடைந்துள்ளதாகவும் மாநில அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் தனேந்திர சாஹு நக்சல்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு மாநில உள்துறை அமைச்சர் தம்ரத்வாஜ் சாஹு  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,

2018ஆம் ஆண்டு முதல் நிகழ்வாண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை 216 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 966 பேர் சரணடைந்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக சுக்மா மாவட்டத்தில் 82 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், 333 பேர் சரணடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பிஜாப்பூர் (46), டான்டேவாடா (30), ராஜ்நந்த்கான் (17), நாராயன்பூர் (16), பஸ்தர் (7), தம்தாரி (7) ), கங்கர் (6), கபிர்தாம் (3) மற்றும் கரியாபந்த் மற்றும் கோண்ட்கான் மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.

மேலும், டான்டேவாடாவில் (300), நாராயண்பூரில் (164), பிஜாப்பூரில் (77), கோண்டகானில் (46), பஸ்தாரில் (36), ராஜ்நந்த்கானில் (7) மற்றும் காங்கரில் (3) பேர் சரணடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.