பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு

இலங்கையில் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

PTI

இலங்கையில் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்றே வெளியிடவுள்ளனர். அதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது குறித்து தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா கூறுகையில்,

இலங்கையில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 71 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.  நாடு முழுவதும் உள்ள 64 வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மொத்தம் 3,328 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை பணிக்கு வரும் அனைத்து பணியாளர்களும் சுகாதரத் துறை அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக 8,000 சுகாதார பணியாளர்கள் சுகாதார பணியை மேற்கொள்கின்றனர் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.