பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

தோல்வியை மறைப்பதற்காக திசைதிருப்பும் உத்தியைக் கையாள்கிறது பாஜக: மாயாவதி குற்றச்சாட்டு

மத்தியிலும் மாநிலங்களிலும் தோல்வி அடைந்துள்ள பாஜக அரசுகள், அதை மறைப்பதற்காக பல்வேறு திசைதிருப்பும் உத்திகளைக்

News image
Updated On :16 செப்டம்பர் 2018, 3:39 pm


லக்னோ: மத்தியிலும் மாநிலங்களிலும் தோல்வி அடைந்துள்ள பாஜக அரசுகள், அதை மறைப்பதற்காக பல்வேறு திசைதிருப்பும் உத்திகளைக் கையாள்வதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு பாஜக அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை.

மத்தியிலும் மாநிலங்களிலும் பாஜக அரசுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அதை மறைப்பதற்காக மக்களைத் திசைதிருப்பும் உத்திகளைக் கையாள்வதாகவும், வாஜ்பாயின் மறைவை அரசியல் ஆதாயம் பெறப்பயன்படுத்த பாஜக முயல்வதாகவும் குற்றம்சாட்டினார். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவுக்கு பாஜக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குஜராத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு கும்பல் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பின்தங்கிய பிரிவினர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றார். 

மேலும், எந்த தேர்தலிலும் எந்த மாநிலத்திலும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம். எங்களுக்கு தேர்தலில் மரியாதையான அளவுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும். ஒருவேளை மரியாதையான தொகுதிகள் வழங்காவிட்டால் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளோம் என்று மாயாவதி கூறினார். 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மாயாவதியின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.