/

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி அன்வர் மர்மநபர்களால் படுகொலை

கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் பாஜக நகர பொதுச் செயலாளர் மொகமத் அன்வர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:01 pm

ANI

சிக்மகளூர்: கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் பாஜக நகர பொதுச் செயலாளர் மொகமத் அன்வர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

கவுரி கலுவ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் அன்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் அப்பகுதி பாஜகவினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ள போலீஸார் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.