அமராவதி: நான்காவது சர்வதேச யோகா தினத்தையொட்டி அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
உத்தரக்கண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நான்காவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசுகையில், யோகா உலகின் ஒருங்கிணைந்த சக்திகளில் ஒன்று. "ஒருவரின் உடல், மூளை மற்றும் ஆத்மாவை ஒன்றாக இணைக்கிறது யோகா. எனவே, ஒரு சமாதான உணர்வை யோகா உருவாக்குகிறது. டேராடூன் முதல் டப்ளின் வரை, ஷாங்காய் முதல் சிகாகோ வரை, ஜகார்த்தா முதல் ஜொஹனஸ்பர்க் வரை எங்கு நோக்கினாலும் யோகா தான் என்றும் கூறினார். அனைவரையும் ஒன்றிணைக்கும் வலிமையான ஆற்றலாக யோகா திகழ்கிறது.
யோகா மூலம் புதிய அனுபவம் கிடைக்கிறது. உலகிற்கே இந்தியா அளித்த பரிசு யோகா. நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். யோகா பயிற்சியால் மன நிம்மதி அடையும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். மனம், அறிவு, உடலை இணைத்து அமைதியை உருவாக்குகிறது யோகா என்றார்.
ஆந்திராவின் அமராவதி நகரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்று வரும் நான்காவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு யோகா பயிற்சியை செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress

360 கோணத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன்; தலை வணங்குகிறேன்: முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர்

தமிழ்நாடு தேர்தல்! கிராமங்களை சமநிலை செய்த நகரங்கள்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


