ஸ்ரீநகரில் பாகிஸ்தான் கொடியுடன் வன்முறை கும்பல் இந்திய ராணுவத்தினர் மீது கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை அடுத்து இன்று சனிக்கிழமை வாகா எல்லையில் ரம்ஜான் பண்டிகையின் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாற்றம் நிகழ்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரம்ஜான் நோன்பு தொடங்கியதிலிருந்தே, எல்லைத் தாண்டிய தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தீவிரவாதிகளும் பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் நம் ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.
பண்டிகை தினங்களில் வாகா எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், ரம்ஜான் பண்டிகையின் போதும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் இனிப்புகளை பரிமாறிக்கொள்வார்கள்.
ஆனால், இன்று சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல் காரணமாக, வாகா எல்லையில் வழக்கமாக இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் இடையே நடைபெறும் இனிப்பு பரிமாற்றம் நிகழவில்லை இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையை மீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் நிகழ்த்திய தாக்குதலுக்கு எல்லை பாதுகாப்பு விர்ரகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.
ஸ்ரீநகரில் ரம்ஜான் தொழுகைக்கு பிறகு பாகிஸ்தான் ஆதாரவாளர்கள் சிலரும், ஐ.எஸ் பயங்கரவாத இயக்க கொடியுடன் வன்முறைக் கும்பல் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டது. இளைஞர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதினர்.
இதையடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர். இதனால், அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த சம்பவத்திற்கு பின் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே, ரம்ஜானை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு மாத சண்டை நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. போர்நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


