லக்னோ: காங்கிரஸ் கட்சி முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தானா அல்லது முஸ்லீம் பெண்களுக்குமா என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.
உத்தரபிரததேசத்தில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அதி விரைவு சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா அல்லது முஸ்லீம் பெண்களுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அதி விரைவு சாலை திட்டத்தால் நொய்டா போன்ற மாநிலத்தில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும், பரபங்கி, அமேதி, சுல்தான்பூர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை தலைநகர் லக்னோவுடன் இணைக்கும் விதத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த விரைவுசாலை மூலம் காய்கறிகள், பழங்கள் பால் உள்ளிட்டவற்றை குறைந்த நேரத்தில் தலைநகர் தில்லி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு செல்ல முடியும் என்றார்.
பூர்வாஞ்சல் சாலை திட்டத்தால் கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகள் வளர்ச்சியடையும். நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள கிராம மக்களின் அடையாளமே மாறும் என்று பெருமிதத்துடன் கூறினார்.
கடந்த ஆட்சிக்காலங்களில் வாரணாசியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டன; மக்கள் பாஜக ஆட்சியை தேர்ந்தெடுத்ததும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறத் தொடங்கியது. பாஜக அரசு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த திட்டம் உத்தரபிரதேசத்தை உன்னதமான உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் மற்றும் ஊழலை ஒழித்து முதலீட்டாளர்களை மாநிலத்திற்கு கொண்டு வருவதும், சிறிய வர்த்தகர்களுக்கு வியாபாரத்தை எளிதாக்குவதும் பாராட்டுக்குரியவை என்று மோடி தெரிவித்தார்.
மேலும், பரம்பரை அரசியலில் ஈடுபடும் கட்சிகள் முஸ்லீம் பெண்கள் துயரப்படும் வகையில் முத்தலாக் முறை தொடர வேண்டும் என்று விரும்புவதாக குற்றம்சாட்டிய மோடி, முத்தலாக் முறைக்கு எதிராக அரசு போராடும். முத்தலாக் தடை சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுப்பதாக குற்றம்சாட்டினார்
அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக, பின்தங்கிய வகுப்புகளின் வளர்ச்சியை தடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறது. தலித்துகள், ஏழைகளும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வலுவடைந்திருந்தால், அவர்களுடைய 'வியாபாரம்' முடக்கப்படும் என்றார்.
காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான கட்சி என அதன் தலைவர் பேசியதாக செய்தித்தாள்களில் படித்தேன், காங்கிரஸ் ஆண் முஸ்லிம்களுக்கானதா? அல்லது பெண் முஸ்லிம்களுக்கும் சேர்த்துதானா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், முன்பு ஒருவரையொருவர் பார்க்க கூட விரும்பாமல் கண் பார்வையற்ரவர்களாக இருந்தவர்கள் எல்லாம் தற்போது இரவும் பகலும் ஒன்றிணைந்து தமக்கு எதிராக குரல் எழுப்புவதாகவும் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி சாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


