மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஏழைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் என

News image
Updated On :9 ஜூலை 2018, 9:57 am

புதுதில்லி: தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தில்லியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தில்லியில் அரசு மானியமாக அளித்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம் மீறப்பட்டாலோ, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு பாரபட்சமாக சிகிச்சை அளிக்கப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவை குறித்தும், இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா என்பதையும் கண்காணித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.