ராஞ்சி: மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இறைச்சி வியாபாரியை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகள் 8 பேருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவால் சர்ச்சையை எழுந்துள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி ஜெயந்த் சின்ஹாவின் ஹசாரிபாக் தொகுதிக்கு உள்பட்ட ராம்கர் நகரில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி, அலீமுதீன் அன்சாரி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாகத் தாக்கியது. வாகனத்துக்கும் தீ வைத்தது. இதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவின் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர். கொலை செய்ததாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களை குற்றவளிகளாக அறிவித்து விரைவு நீதிமன்றம் மார்ச் மாதம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் பாஜக தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அண்மையில் நிறுத்தி வைத்ததுடன் அவர்களுக்கு ஜாமீனும் வழங்கியது.
இந்நிலையில், ஜாமீன் பெற்ற 8 பேரும் ஹசாரிபாக்கில் உள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டிற்கு சென்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஜெயந்த் சின்ஹா, இனிப்பு வழங்கி பாராட்டினார். பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் தீர்ப்ளிக்கப்பட்டவர்களை மத்திய அமைச்சர் ஒருவர் சந்தித்திருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. .
குற்றவாளிகளை பாராட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஜெயந்த் சின்ஹா கூறியதாவது:- ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அவர்களில் சிலர் மீதான குற்றச்சாட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர்கள் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன். சட்டம் தனது கடமையை செய்யும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதேசமயம் அப்பாவிகள் விடுவிக்கப்பட வேண்டும். தான் எந்த விதமான சட்டவிரோத செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


