/

காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது குண்டு வீச்சு: வீரர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஹைடர்போரா பகுதி வழியாக ரோந்து சென்ற பாதுகாப்பு படை வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு

Updated On :7 ஜூலை 2018, 1:22 pm

 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஹைடர்போரா பகுதி வழியாக ரோந்து சென்ற பாதுகாப்பு படை வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் வீரர் ஒருவர் காயமடைந்தார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் ஹைடர்போரா பகுதி வழியாக இன்று பிற்பகல் வழக்கம்போல் மத்திய துணை ராணுவப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வாகனங்களின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் துணை ராணுவப் படையை சேர்ந்த ஒரு வீரர் காயமடைந்தார்.

இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.