/

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

News image
Updated On :6 ஜூலை 2018, 4:12 am

மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள பசுபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணியலவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. 

நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர். 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.