மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

மும்பையில் ரயில் நிலைய பாலம் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் காயம்

மும்பையில் உள்ள அந்தேரி ரயில் நிலைய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:07 pm

ANI


மும்பை: மும்பையில் உள்ள அந்தேரி ரயில் நிலைய நடைபாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள அந்தேரி நகரில் பரபரப்பாக இயங்கும் ரயில் நிலையமான அந்தேரி ரயில் நிலையத்தை ஒட்டி அந்தேரி மேற்கு மற்றும் அந்தேரி கிழக்கு ஆகிய பகுதிகளை இணைக்கும் ரயில்வே நடைபாலத்தின் ஒரு பகுதி இன்று காலை 7.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடைபாலம் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தேசிய மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். 

இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா? என சோதித்து வருவதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.  

நடைபாலத்தின் இடிபாடுகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளதால், மின் கம்பிகள் அறுந்துள்ளதால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசைகளில் செல்லும் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், காலையில் பணிக்கும் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், நகரின் தாழ்வான சில பகுதிகளும் நீரில் மூழ்கி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் சில இடங்களில் 110 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், ரயில்வே நடைபாலம் இடிந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.