கொல்கத்தா: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகளை அரசு தவிர்த்து ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் ஏன் தவிர்க்கப்பட்டன? என கேள்வி எழுப்பினார்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவானது அரசாங்கத்தின் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவும், விலை பேச்சுவார்த்தை குழுவும் ஏன் இருளில் மறைக்கப்பட்டன? என கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் கொள்முதல் விலைக்கும், இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கொள்முதல் விலைக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.526 கோடி அளவில் வாங்கியது. பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.1,670 கோடி அளவிற்கு விலை நிர்ணயித்து வாங்கி உள்ளது. இந்த எண்ணிக்கை சரியெனில், விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சிதம்பரம், இதுகுறித்து யாராவது விளக்குவார்களா? என்று கேட்டுள்ளார்.
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


