பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் வனத்துறை அதிகாரி சுட்டுகொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா அருகே வனத்துறை அதிகாரி ஒருவர் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  

News image
Updated On :24 ஆகஸ்ட் 2018, 2:36 am


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா அருகே வனத்துறை அதிகாரி ஒருவர் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் வசித்து வரும் வனத்துறை அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். உடலில் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்த வனத்துறை அதிகாரி தாரிக் அகமத் மாலிக் (38) என போலீஸாரால் அடையாளம் காணப்பட்டது. வனத்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வழக்கின் முதல்கட்ட விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி யூசுஃப் தார் காண்ட்ரூ இந்த கொலை வழக்கில் ஈடுபட்டிருப்பது போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக ஜம்முவில் பயங்கரவாதிகள் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்திருந்த பயாஸ் அகமது ஷா என்னும் போலீஸ் அதிகாரி ​​பயங்கரவாத இயக்கத்தின் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.