டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆம்பூரில் திமுக அலுவலகம் முற்றுகை

ஆம்பூர் தொகுதியில் திமுக கூட்டணிக்காக ஒத்துக்கப்பட்டதையடுத்து, அதிருப்தியாளர்கள் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:02 pm

எம். அருண்குமார்

ஆம்பூர்: ஆம்பூர் தொகுதியில் திமுக கூட்டணிக்காக ஒத்துக்கப்பட்டதையடுத்து, அதிருப்தியாளர்கள் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. நேற்று ஆம்பூர் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் ஆம்பூர் தொகுதியில் வி.ஆர் நசீர் அகமது தேர்வு செய்யப்பட்டார். இதற்கு, நிர்வாகிகள் சிலர் திமுக.,வில் சென்று தங்களின் அதிப்தியை தெரிவித்தனர். திமுக தலைவர் கூட்டணிக்காக பணி செய்யுமாறு சொல்லி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர் ஆம்பூர் நிர்வாகிகள். இந்நிலையில் மனிய நேய மக்கள் கட்சியில் ஆம்பூர் சார்ப்பில் வி.ஆர் நசீர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து திமுக., நிர்வாகிகளுக்கிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் ஆம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு வாய்ப்பளிக்க கோரி ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர்.

ஆம்பூர் நேதாஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் நகர செயலாளர் எம்.ஆர் ஆறுமுகம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதனால் ஆம்பூரில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.