புதுச்சேரி முதல்வரை சந்திக்க நகராட்சி, பஞ்சாயத்து ஊழியர்கள் முடிவு
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஊழியர்களுக்கு 3 கட்ட பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக புதுச்சேரி முதல்வரை நேரில் சந்திக்க சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.


என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஊழியர்களுக்கு 3 கட்ட பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக புதுச்சேரி முதல்வரை நேரில் சந்திக்க சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் காரைக்கால் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ஐய்யப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொடர் போராட்டத்தின் எதிரொலியாக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்கள், கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் என்.எம்.ஆர் ஊழியர்கள் ஆகியோர்களை ஒரு முறை நிகழ்வாக பணி நிரந்தரம் செய்வதற்கு ஏதுவான நடவடிக்கையை அரசு எடுத்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் பணி காலத்திற்கேற்ப ஒரு முறை நடவடிக்கையாக 8, 16, 24 வருடங்களை கணக்கில் எடுத்து ஊழியர்களுக்கு 3 கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வு அளிப்பதன் மூலம் ஏற்படும் சில இடர்பாடுகள், அதனை களைவது குறித்து சம்மேளன நிர்வாகத்தினர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஜெய்சிங், பொது செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். சம்மேளன துணை தலைவர் ஜோதிபாசு, உலகநாதன், துணை செயலாளர் காளிதாஸ், செயற்குழு உறுப்பினர்கள் சகாயராஜ், ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சம்மேளன செயலாளர் ஷேக் அலாவுதீன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...