நிகழ்ச்சியில் கடலோரக் காவல்படையின் காரைக்கால் மைய கமாண்டன்ட் உதல்சிங், 2 கப்பல்களின் உதவி கமாண்டன்ட் சுபாஷ் கபூர் (சி-415), பி.சரண் (சி-416) ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக, காரைக்கால் மாவட்ட நீதிபதி வைத்தியநாதன், காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.கவாஸ், நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி, காரைக்கால் துறைமுக நிர்வாக பொதுமேலாளர் (திட்டம்) ஜி.ராஜேஷ்வர்ரெட்டி, துறைமுக மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.ராபர்ட்ரோக் மற்றும் கப்பல் தயாரிப்பு நிறுவனமான எல்000க்ஷடி நிறுவன துணைத் தலைவர் நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக இரு கப்பல்களின் உதவி கமாண்டன்ட்டுகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. கப்பல் வீரர்களுடன் எஸ்.பி.சர்மா, கப்பல்களுக்குள் சென்று பார்வையிட்டார்.