பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி மீனவர் பலி

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கியதில் உடல் கருகி இன்று உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:40 am

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கியதில் உடல் கருகி இன்று உயிரிழந்தார்.

சிறுதலைக்காடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிபப்பன் மகன் கோவிந்தராசு(48). இவர், புதன்கிழமை அதிகாலையில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளார். கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலின் உடவு பகுதில் கரைவலை விரித்து மீன்பிடித்துள்ளார்.

இந்த நிலையில்,புதன்கிழமை காலையில் வேதாரண்யம் பகுதியில் லேசான மழைப்பொழிவு இருந்தது.கடல் பரப்பு மற்றும் கடலோரத்தில் இடியுடன் கூடிய கனமழை ஏற்பட்டது. மழைக்காக கரையோரத்தில் உள்ள கருவேல் மரத்தின்கீழ் ஒதுங்கியுள்ளார்.அப்போது மீன்னல் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார் மீனவரின் சடலத்தை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டனர். வட்டாட்சியர் எம்.சாந்தி விசாரணை மேற்கொண்டார்.இது குறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.