மேலும், முக்கியமாக அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம், கொசுக்கள் மூலம் பரவும் சுகாதார கேடுகளுக்கான தடுப்பு நடவடிக்கை, சுகாதார வளாகம் பயன்படுத்துதல், பிளாஸ்டிக் உபயோகம், இறைச்சிக் கடைகளை ஒழுங்குப்படுத்துதல், தெருக்களில் சூரிய சக்தி விளக்குகளை பராமரித்தல், புகையிலை பயன்பாட்டை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு, ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் வரவு செலவு குறித்து விவாதித்தல், மகளிர் திட்டம் அடிப்படை தகவல் சேகரித்தல், பிரதம மந்திரி கிராம சாலைகள் இணைப்புத் திட்டம், ஊராட்சிக்கான தணிக்கை மற்றும் பொதுமக்கள் தொடர்பான திட்டங்கள் ஆகியவைகள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.