சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் நகை பறித்தவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்

விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஊழியரின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையைச் பறித்துக் கொண்டு தப்பியோட முயற்சித்தவரை அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:09 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஊழியரின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையைச் பறித்துக் கொண்டு தப்பியோட முயற்சித்தவரை அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து சூலக்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சாத்தூரை அடுத்த அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜின் மனைவி உமா(30). இவர் விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்தில் கணிப்பொறி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் புதன்கிழமை காலையில் 10 மணிக்கு நீதிமன்ற பணி செய்வதற்காக வளாகத்திற்கு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்புறமாக வந்த ஒருவர் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் உமாவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையைச் பறிக்க முயற்சிக்கையில் உமாவும் விடாமல் போராடினாராம். அதோடு, உடனே அப்பகுதியில் இருந்தவர்களை சத்தம் போட்டு உதவிக்கு அழைத்தார். அதற்குள், நகையை பறித்துக் கொண்டு தப்பியோட முயற்சிக்கையில் பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த சூலக்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், இது குறித்து போலீஸார் விசாரணை செய்தனர். அதில், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரின் மகன் ஜான் அலெக்ஸாண்டர் என்பதும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார் என்கிற விவரமும் தெரியவந்தது. இது தொடர்பாக நீதிமன்ற பெண் ஊழியர் உமா சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.