ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆம்பூர் அருகே கார்-லாரி மோதி விபத்து: வியாபாரி பலி, 4 பேர் படுகாயம்

வங்கிகளில் வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்ஸ் வங்கி அறிவித்துள்ளது.

Updated On :3 பிப்ரவரி 2015, 7:01 am

ஆம்பூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  3 பெண்கள் உட்பட 4 பேர் காயமடந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்தவர் வியாபாரி ரவிக்குமார் (55). இவரது மனைவி மகேஸ்வரி. இருவரும் தங்களது மகள் மற்றும் மருமகனை சென்னை விமானநிலையத்தில் விட்டு விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அவர்களுடன் உறவினர்கள் ராஜேஷ் மனைவி நித்யா, ஜெயராஜ் மனைவி ஜெயா ஆகியோர் இருந்தனர்.  காரை மொரப்பூரை சேர்ந்த டிரைவர் இளையராஜா என்பவர் ஓட்டினார்.

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்ற போது கார் லாரியின் பின்புறம் மோதியது. அதில் காரில் ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் உடனிருந்த நித்யா, ஜெயா, மகேஸ்வரி, டிரைவர் இளையராஜா ஆகியோர் பலத்த காயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.