பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகள் ரேசன் பொருள்களின் மானியத்தை கடுப்படுத்துவதை கண்டித்து ரேசன் கடை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:25 am

எஸ். பாண்டியன்

மத்திய, மாநில அரசுகள் ரேசன் பொருள்களின் மானியத்தை கடுப்படுத்துவதை கண்டித்து ரேசன் கடை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் 2-வது ரயில்வே கேட் அருகே உள்ள ரேசன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் எல்.முருகன் முன்னிலை வகித்தார். மேலும், நகர்குழு உறுப்பினர்கள் பி.நேரு, எ.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், உணவு பாதுகாப்பு என்ற பேரில் ரேசன் கடைகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். அனைத்து ரேசன் கடைகளிலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை தவறாமல் விநியோகம் செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு மாதந்தோறும் 10 லிட்டர் மண்ணெண்ணெய்  வழங்கவும், எடை குறைவில்லாமல் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.