டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம் :  கிராம நிர்வாக அலுவலர் கைது

ஆம்பூர் அருகே பட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:15 am

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே பட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஆம்பூர் அருகே மணியாரகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் மகன் விவசாயி சீதாபாதி.  இவருடைய நிலத்தில் உள்ள கிணற்றில் பம்ப்செட் அமைக்க மின் இணைப்பு பெற முயற்சித்துள்ளார்.  பட்டாவில் அவருடைய பெயர் இல்லாததால் மின்வாரிய அதிகாரிகள் பட்டாவில் பெயர் இருந்தால் தான் மின் இணைப்பு தர முடியும்.  அதனால் பட்டாவில் பெயர் சேர்த்துவிட்டு பிறகு அதனை கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.

அதன்படி கடந்த ஏப்.6-ம் தேதி குமாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாவை (33) சந்தித்து பட்டாவில் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளார்.   பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டுமென ராஜா கேட்டுள்ளார்.   ஆனால் அவ்வளவு பணம் தரமுடியாது என அவர் கூறியுள்ளார்.  ரூ.5 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டாவில் பெயர் சேர்க்க முடியுமென அவர் கூறியுள்ளார்.  அதைத் தொடர்ந்து அன்றே ரூபாய் ஆயிரத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். 

பிறகு பட்டாவில் பெயர் சேர்ப்பது சம்பந்தமாக பல முறை கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து அதுகுறித்து கேட்டுள்ளார்.  ஆனால்  அவர் பணம் கொண்டு வந்து கொடுத்தால் தான் அதற்கான நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறினாராம்.  அதனால் சீதாபதி வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸôரிடம் புகார் அளித்துள்ளார்.  புகாரை பெற்றுக் கொண்ட போலீஸôர் மீதி ரொக்கம் ரூ.4 ஆயிரத்தை ரசாயன பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகளாக சீதாபதியிடம் கொடுத்து அனுப்பினர்.  அவரும் கிராம நிர்வாக அலுவலரை பார்க்க செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். 

அவர் கேட்ட ரொக்கம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.  அதைத் தொடர்ந்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் பழனி, திருநாவுக்கரசு, அசோகன் மற்றும் போலீஸார் அங்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் நாட்றம்பள்ளி அருகே மல்லப்பல்லி கிராமத்தை சேர்ந்த ராஜவை கைது செய்தனர்.  அவரிடமிருந்து ரொக்கப் பணம் ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.