பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தூத்துக்குடி துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மூவர் கைது

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள பிஎஸ்ஏ சிகால் வெளிநாட்டில் இருந்து மரத்தடிகள் இறக்குமதி செய்யும் பிஎஸ்ஏ சிகால் என்ற சரக்கு கையாளும் நிலையத்தில் மத்திய

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:10 am

தி. இன்பராஜ்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள பிஎஸ்ஏ சிகால் வெளிநாட்டில் இருந்து மரத்தடிகள் இறக்குமதி செய்யும் பிஎஸ்ஏ சிகால் என்ற சரக்கு கையாளும் நிலையத்தில் மத்திய குற்றப்புலனாய்புப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் புதன்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பல லட்சம் ரூபாய் பணக்கட்டுகளுடன் நின்ற ஒரு இளைஞரை பிடித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, மரத்தடிகள் இறக்குமதி செய்யும் போது சலுகை அளிப்பதற்காகக சுங்கத்துறை அதிகாரிகள் மூவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணத்தை வைத்துக் கொண்டு நின்றதாக அந்த இளைஞர் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்தாராம்.

அந்த இளைஞர் அளித்த தகவலின் அடிப்படையில் சுங்கத் துறை கண்காணிப்பாளர் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் என மொத்தம் மூன்று அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின்போது, அவர்கள் லஞ்சம் பெற தாயராக இருந்தது உண்மை என தெரியவந்ததால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.