டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட குடும்பத்தினர் தர்ணா

காதல் திருமணம் செய்து கொண்டதால் ஊர் பஞ்சாயத்தாரால் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட காதல் தம்பதியினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார் தங்களை ஊருக்குள்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:09 am

எம். அருண்குமார்

காதல் திருமணம் செய்து கொண்டதால் ஊர் பஞ்சாயத்தாரால் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட காதல் தம்பதியினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார் தங்களை ஊருக்குள் சேர்த்துக் கொள்ளுமாறு கோரி தங்கள் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து புதன்கிழமை தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஆம்பூர் அருகே சின்னவெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் கோவிந்தராஜூம், அதே ஊரை சேர்ந்த பார்வதியம்மாள் மகள் அனுஷாவும் காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பதி திருமலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  காதல் திருமணத்திற்கு கோவிந்தராஜ் வீட்டார் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் அனுஷாவின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதல் திருமணத்திற்கு பிறகு ஊருக்கு வந்த காதல் தம்பதியினரை பஞ்சாயத்தை கூட்டி ஊர் பஞ்சாயத்தை சேர்ந்த ஊர் நாட்டாண்மை ஜி. பட்டாபி, பெருதனக்காரர் டி. மகாதேவன், பொருளர் சி. மோகன், பஞ்சாயத்தை சேர்ந்த வி. செல்வம், கே. சிவக்குமார் ஆகியோர் விசாரித்துள்ளனர்.   

காதல் திருமணம் செய்து கொண்ட கணவன்-மனைவிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரமும், மகன் காதல் திருமணம் குறித்து ஊர் பஞ்சாயத்தாருக்கு தகவல் தெரிவிக்காததால் கோவிந்தராஜின் தந்தை ஜெயராமனுக்கு ரூ.3 ஆயிரமும் அபராதம் விதித்துள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவ்வளவு தொகையை அபராதமாக செலுத்த இயலாது என கூறியதால் அவர்களை பஞ்சாயத்தார் ஊரை விட்டு விலக்கி வைத்தனராம்.   கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளவும், வீட்டிற்கு தேவையான குடிநீரை பெறுவதற்கும் ஊர் பஞ்சாயத்தார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.  மேலும் ஊரை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜின் குடும்பத்தாருடன் பழகக் கூடாது, பேசக்கூடாது என்று தடை விதித்தனராம்.  அதையும் மீறி பேசி, பழகினால் அவர்கள் பஞ்சாயத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டுமென எச்சரித்துள்ளனர்.

அதனால் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் அவர்களுடன் பேசுவதும் இல்லை, பழகுவதும் இல்லை.   அபராதத் தொகை செலுத்த முடியாதவர்களுக்கு திருமணம் எதற்கு என்று கேட்டு கோவிந்தராஜை இழிவாக பேசியுள்ளனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பஞ்சாயத்தாருக்கு வழக்குறைஞர் மூலம் கோவிந்தராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  அதனால் ஆத்திரமைடந்த ஊர் பஞ்சாயத்தார் அபராதத் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அதை செலுத்த வேண்டுமென எச்சரித்துள்ளனர்.   ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட குடும்பத்தினரை பார்க்கும் பொழுதெல்லாம் ஊர் பஞ்சாயத்தார் இழிவாக பேசி அவர்களை அவமானப்படுத்தியுள்ளனர்.

இது சம்பந்தமாக கடந்த ஜனவரி மாதம் உமர்ஆபாத் போலீஸில் கோவிந்தராஜ் புகார் செய்துள்ளார்.  ஊர் பஞ்சாயத்தாரை அழைத்து பேசி தீர்வு காண்பதாக போலீஸôர் தெரிவித்துள்ளனர்.  ஆனாலும் ஊர் பஞ்சாயத்தாரின் நெருக்கடி அதிகரித்துள்ளது.  அதனால் கோவிந்தராஜின் குடும்பத்தார் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். 

அதனால் விரக்தி அடைந்த அவர்கள் குடும்பத்தார் புதன்கிழமையன்று தங்கள் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தங்களை ஊரைவிட்டு தள்ளி வைத்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கும் பஞ்சாயத்தார் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வட்டாட்சியர் பி. ரத்னா அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து வட்டாட்சியர் பி. ரத்னா கூறியது, ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினேன்.  இதுகுறித்து ஆம்பூர் டிஎஸ்பிக்கு தகவல் தெரிவித்துள்ளேன்.  ஊர் பஞ்சாயத்தாரை போலீஸார் அழைத்து விசாரணை நடத்தி அப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.