கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விருதுநகரில் அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த அமில பாட்டில்கள் பறிமுதல்: 5 பேர் கைது

விருதுநகர், சூலக்கரை, ஆமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் மெடிக்கல் மருந்துக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனையிட்டனர். அதில், விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள கடையில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:50 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் பகுதியில் காவல் துறையினர் நடத்திய தீவிர சோதனையில் அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்ததாக 35 லிட்டர் அமில பாட்டில்களை பறிமுதல் செய்து 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர், சூலக்கரை, ஆமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் மெடிக்கல் மருந்துக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனையிட்டனர். அதில், விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள கடையில் அனுமதியின்றி அமிலம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அதையடுத்து அக்கடையிலிருந்து 700 மி.லிட்டர் அமில பாட்டிலை பறிமுதல் செய்ததோடு உரிமையாளர் முகுந்தராஜனையும் கைது செய்தனர்.

இதேபோல், விருதுநகர் மல்லாங்கிணறு சாலையில் உள்ள கடையில் வைத்திருந்த 27 லிட்டர் பாட்டில்களையும், ஆமத்தூர்-நாட்டார்மங்கலம் சாலையில் தனியார் மெடிக்கல் மருந்துக் கடையில் 2 அரை லிட்டர் பாட்டில்களையும், சூலக்கரை வி.ஓ.சி நகர் கடையில் 3 லிட்டர் பாட்டில்களையும், அருப்புக்கோட்டை சாலையில் 3 லிட்டரும் என மொத்தம் 35 லிட்டர் பாட்டில்களை போலீஸார் சோதனை செய்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த மகேந்திரன்(38), ஆமத்தூர் சின்னத்தாய்(33), வி.ஓ.சி.நகரைச் சேர்ந்த கார்த்தீஸ்வரி(31) மற்றும் இன்பராஜ் உள்ளிட்ட 5 பேரை அந்தந்த பகுதி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.