கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து ஒரு கழகமாக உருவாக்க வேண்டும்: 21-வது பொது மாநாட்டில் தீர்மானம்

விருதுநகர் வெங்கடாசாமி நாயுடு-பாக்கியம்மாள் கலையரங்கத்தில் மதுரை மண்டல பொது இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 21-வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மதுரை மண்டல பொது

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:49 am

எஸ். பாண்டியன்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து ஒரு கழகமாக உருவாக்க வேண்டும் என மதுரை மண்டல பொது இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்க 21-வது பொது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் வெங்கடாசாமி நாயுடு-பாக்கியம்மாள் கலையரங்கத்தில் மதுரை மண்டல பொது இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 21-வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மதுரை மண்டல பொது இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட தலைவர் வி.காளிதாசன் வரவேற்புரை வழங்கினார். இம்மாநாட்டை சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தொடங்கி வைத்து துவக்கவுரையாற்றினார். மேலும், அகில இந்திய பொது இன்ஸ்சூரன்ஸ் நிலைக்குழு செயலாளர் எஸ்.என்.ராஜூ மற்றும் தெற்கு மண்டல துணைத் தலைவர் எஸ்.வி.சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையிலும் நிறைவேற்றி விரைவில் சட்டமாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், அத்துமீறல்களும் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பெண்களை வக்கிரமாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் வேண்டும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ஊரகப் பகுதிகளில் நிலவி வரும் தீண்டாமை கொடுமைகளை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து தீர்வு காணவேண்டும்.

அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் சட்டபூர்வமான ஓய்வூதியம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு 40 ஆண்டுகளாக சிறப்பான சேவை வழங்கி வரும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் நான்கையும் இணைத்து ஒரு கழகமாக உருவாக்கிட வேண்டும். இந்த நிறுவனங்களில் உள்ள  காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் மதுரை கோட்ட பொருளாளர் ஜி.அருணா, பொதுச் செயலாளர் எம்.புஷ்பராஜன், இணைச்செயலாளர் பி.சத்தியநாதன், இணைச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், அனைத்து சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தேனி வசந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், திருநெல்வேலி மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.