கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விருதுநகர் அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து 15 சவரன் நகை திருட்டு

விருநகர் அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 15 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து மல்லாங்கிணறு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:48 am

எஸ். பாண்டியன்

விருநகர் அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 15 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து மல்லாங்கிணறு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே மல்லாங்கிணறு முத்துநாகம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி பாண்டிசரஸ்வதி(30). இவரது கணவர் புதுதில்லியில் உள்ள உணவு விடுதியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை மதியம் 2 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு வெளியே கடைப் பகுதிக்கு சென்றாராம். அதையடுத்து, அரை மணிநேரம் நேரத்திற்கு பின் திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதையடுத்து, உள்ளே சென்று பார்க்கையில் பீரோவையும் உடைத்து உள்ளேயிருந்த 5 சவரன் தாலி சங்கிலி, 9 சவரன் சங்கிலி மற்றும் சில்லரை பொருள்கள் என மொத்தம் 15 சவரன் நகையை காணாமல் போயிருந்தது. யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தான் கடைக்குச் சென்ற நேரத்தை சாதகமாக  பயன்படுத்தி திருடிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பாக மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆகியோருடன் விரைந்து வந்து சோதனை செய்தனர். இது குறித்து பாண்டி சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து 15 நகையை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.