இந்த இடைத்தேர்தலுக்காக 3 வட்டார ஊராட்சி வார்டு பதவிகளுக்கு 40 வாக்குச்சாவடிகளும், 14 கிராம வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 14 வாக்குச் சாவடிகளும், 4 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 13 வாக்குச்சாவடிகளும், நகராட்சி உறுப்பினர் வார்டு பதவிகளுக்கு 4 வாக்குச் சாவடிகளும் என 71 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரமும், வட்டார ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர் மற்றும் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வாக்குப் பதிவு சீட்டு அடிப்படையிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தல் பணியில் 284 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் மொத்தம் ஆண்கள்-12911, பெண்கள்-13314, திருநங்கை-1 என மொத்தம் 26,226 பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.