விருதுநகர் அருகே இளைஞர் தூக்கிட்டு சாவு
விருதுநகர் அருகே அல்லம்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த ஜேசுராஜின் மகன் செல்வக்குமார்(27). இப்பகுதியில் தனியார் வேனில் ஓட்டுநராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் நடைபெறவில்லை. இவருக்கு


விருதுநகர் அருகே அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இளைஞர் தனக்கு தானே தூக்கிட்டுக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே அல்லம்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த ஜேசுராஜின் மகன் செல்வக்குமார்(27). இப்பகுதியில் தனியார் வேனில் ஓட்டுநராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் நடைபெறவில்லை. இவருக்கு நாள்தோறும் மதுக் குடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இதேபோல், சம்பவத்தன்று இரவு அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வீட்டிற்கு வந்தாராம். அப்போது, பெற்றோர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தும் படி கூறி திட்டினார்களாம். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார் உடனே வீட்டிலிருந்து வெளியேறி அருகில் உள்ள தனியார் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள வேப்பமரத்தில் தான் அணிந்திருந்த கைலியால் தூக்கிட்டு கொண்டாராம். அப்பகுதியில், திங்கள்கிழமை காலையில் காட்டுக்குச் சென்றவர்கள் பார்த்து வீட்டிற்கும், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்களாம். அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து வந்து செல்வக்குமாரின் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவரது தந்தை ஜேசுராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு சாவுக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...