கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விருதுநகர் அருகே தனியார் பேருந்து-பைக் மோதல்: 2 பேர் சாவு

விருதுநகர் அருகே வீரராமலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணனின் மகன் கார்த்திக்(24), அதே ஊரைச் சேர்ந்த மோகனின் மகன் தேவராஜ்(23). இவர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு சாத்தூரில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:06 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து பின்புறமாக மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் அருகே வீரராமலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணனின் மகன் கார்த்திக்(24), அதே ஊரைச் சேர்ந்த மோகனின் மகன் தேவராஜ்(23). இவர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு சாத்தூரில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது, சாத்தூர்-விருதுநகர் 4 வழிச்சாலையில் இனாம்ரெட்டிபட்டி விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் போது திருநெல்வேலியிலிருந்து-சென்னை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து பின்புறமாக மோதியது.

இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த நிலையில்,  தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறி்நத வச்சக்காரப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கார்த்திக்கை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிரமாக சிகி்ச்சை அளிக்கப்பட்டும் ஞாயிற்றுக்கிழமை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநரான சாமிநாதனை கைது செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.