கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விருதுநகர் அருகே கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்: மாணவ, மாணவிகள் உள்பட 16 பேர் காயம்

விருதுநகர் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை மாலையில் சிவகாசி நோக்கிச் சென்றது. அதேபோல், சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி பயணிகளை ஏற்றிக்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:03 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தனியார் பேருந்தும்-தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் எதிர்பாரத விதமாக மோதியதில் 9 மாணவிகள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை மாலையில் சிவகாசி நோக்கிச் சென்றது. அதேபோல், சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, விருதுநகர் அருகே குமாரலிங்காபுரம் வேகத்தடை அபாய வளையில் ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகளும் திரும்பும் போது எதிர்பாரத விதமாக ஓரப்பகுதியில் மோதியது. இதையடுத்து தகவலறிந்த ஆமத்தூர் போலீஸார் விரைந்து வந்து மீட்டு காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், கல்லூரி பேருந்தில் பயணித்த நாராணபுரம் கணேசனின் மகள் அபிராமி(18), சிவகாசி பழனியாண்டவர்காலனி பெரியசாமி மகள் கார்த்திகா(18), கொங்காபுரம் கணேசன் மகள் விஜயநந்தினி(17), பாரைப்பட்டி முனியாண்டி மகள் வீரலட்சுமி(17), சித்துராஜாபுரம் மகாலிங்கத்தின் மகள் உமாசங்கரி(17), அதே கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் மகள் லட்சுமிபிரியா(18), பாலாஜிநகர் ராமமூர்த்தி மகள் ஜெயந்தி(20), திருத்தங்கல் கலைவாணி(18) மற்றும் கார்த்தீஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்து சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், சிவகாசி பகுதி கிராமங்களைச் சேர்நத மாணவர்களான அகமது பயாஷ்(18), ரமேஷ்(20), விஜயகுமார்(18), அருணாச்சலம்(19), சிவகாசி பகுதியைச் சேர்ந்த பேராசிரியர்களான ராஜமுகமது(30), ஷியாம்குமார்(41),விருதுநகரைச் சேர்ந்த நடத்துனர் முருகன்(55) ஆகியோர் லேசான காயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடுகளுக்கு திரும்பினர். இது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.