அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகரில் கஞ்சா விற்றவர் கைது

விருதுநகர் வடமலைக்குறிச்சி சாலைப்பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மேற்கு காவல் நிலைய

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:30 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கஞ்சா விற்றவரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

விருதுநகர் வடமலைக்குறிச்சி சாலைப்பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் போலீஸார் ஆகியோர் திங்கள்கிழமை இரவு திடீர் ரோந்து சென்றனர். அப்போது, 4 வழிச்சாலையிலிருந்து பிரியும் வடமலைக்குறிச்சி சாலை பாலத்திற்கு அடியில் செல்லும் போது ஒருவர் தப்பியோட முயற்சித்தாராம்.

உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் விசாரணை செய்ததில் விருதுநகர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவரின் மகன் மொட்டை என்ற முருகன்(40) என்பது தெரியவந்தது. ஏற்கனவே இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில்  தெரியவந்தது.

இது தொடர்பாக சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.