அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகர் நகராட்சியில் முறைகேடாக பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுத்தவருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம்

விருதுநகர் நகராட்சியில் இரவு நேரங்களில் கட்டையாபுரம் பகுதியில் முறைகேடாக உறுப்பினர்கள் துணையுடன் பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுப்பதற்காக சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்காலையும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:27 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் நகராட்சியில் முறைகேடாக பாதாளச்சாக்கடை இணைப்பு கொடுத்தவருக்கு ரூ.23 அபராதம் விதித்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விருதுநகர் நகராட்சியில் இரவு நேரங்களில் கட்டையாபுரம் பகுதியில் முறைகேடாக உறுப்பினர்கள் துணையுடன் பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுப்பதற்காக சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்காலையும் உடைத்து சேதப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், அப்பகுதியில் ஒரு வீட்டிற்கு இணைப்பு கொடுப்பதற்காக சாலையையும், கழிவு நீர் வாய்க்காலையும் உடைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே அதை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுத்தனர்.

இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மணி கூறியதாவது:

கட்டையாபுரம் பகுதியில் முறைகேடாக இணைப்பு கொடுப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தோம். அதில், கட்டையாபுரம் நடராஜன் என்பவர் வீட்டிற்கு நகராட்சியில் அனுமதியின்றி பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுத்துக் கொண்டிருந்தனர். உடனே அதை தடுத்து நிறுத்தி சாலையை சேதப்படுத்துதல், கழிவு நீர் வாய்க்கால், சிமெண்ட் சாலையை உடைத்தல் போன்றவைகளுக்காக மொத்தம் ரூ.23 ஆயிரம் அபராதம் விதி்த்து மேற்படி நபருக்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.