அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகரில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி

விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் பாத்திமாகனி(35). இவர் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்து வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், அரசு பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:27 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் பாத்திமாகனி(35). இவர் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்து வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், அரசு பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி மதுராந்தகத்தைச் சேர்ந்த சேகர்-பத்மசுந்தரி தம்பதியினர் இவரை அணுகியுள்ளனர். இதற்கு குறிப்பிட்ட அளவு தொகை செலவு ஆகும் என்றும், அதை வங்கியில் வைப்பாக செலுத்தினால் போதும் என  தெரிவித்தார்களாம். இதை உண்மையென நம்பிய பாத்திமாகனி கடந்த 15.11.2011 அன்றைய நாளில் இருந்து தேசிய வங்கி கிளையில் பல்வேறு தவணைகளில் ரூ.8 லட்சம் வைப்பாக செலுத்தினாராம்.

இந்நிலையில், குறிப்பிட்ட நாள்கள் கடந்த நிலையிலும் வேலை வாங்கித் தராமல் இருந்துள்ளனர். இதையடுத்து, தம்பதியினர் மீது சந்தேகம் அடைந்த பாத்திமாகனி வைப்பாக செலுத்திய வங்கி கிளையை அணுகி விசாரணை செய்ததில் பணம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்போது, தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாத்திமாகனி புகார் செய்தார். அதன் அடிப்படையில்  தம்பதியினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிதது வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.