கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர்கள் ஆய்வு

வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நரிக்குடி பகுதி கண்மாய் பகுதிகளுக்கு நேரில் சென்று அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:18 am

எஸ். பாண்டியன்

வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நரிக்குடி பகுதி கண்மாய் பகுதிகளுக்கு நேரில் சென்று அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதை அடுத்து நீர் ஆதாரங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம் பெரிய கண்மாய், நரி்க்குடி ஒன்றியம் நரிக்குடி பொதுப்பணித்துறை கண்மாய், மறையூர் கண்மாய்களில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் மற்றும் அலுவலர்கள் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கண்மாய்களை பாதுகாக்கும் வகையில் நீர் வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதா, தண்ணீர் வெளியேறாமல் இருக்கும் வகையில் ஷட்டர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதுபோன்று அதிக ஹெக்டேர் பாசன வசதி பெறும் கண்மாய்களில் தண்ணீர் வெளியேறாத வகையில் பாதுகாக்க  முன்னெச்சரிக்கையுடனும், மறுகால் பாய்ந்து அடுத்த கண்மாய்களுக்கு எளிதாக செல்லும் வகையில் வரத்துக் கால்வாய்கள் தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதுபோன்று செய்வதால் விவசாய பம்ப்செட் கிணறுகளும் நீர் ஆதாரம் பெற்று விவசாயிகள் பயனடைவார்கள் என்றனர்.

இந்த ஆய்வின் போது விருதுநகர் மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, சிவகாசி சார்-ஆட்சியர் அமர்குஷ்வாஹா, கோட்டாட்சியர் சுபாநந்தினி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர்கள் மு.முத்துலட்சுமி(காரியாபட்டி), பி.ஆனந்தவள்ளி(நரிக்குடி), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கலியமூர்த்தி, வட்டாட்சியர்கள் பொன்ராமர், ரெங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.