சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மாவட்டத்தில் அறிவியல் பாடத்தில் 2923 பேர் 100-க்கு 100

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதை குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்தந்த பள்ளி வளாகங்களில் உள்ள தகவல் பலகையில் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டதை

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:21 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் 2923 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதை குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்தந்த பள்ளி வளாகங்களில் உள்ள தகவல் பலகையில் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டதை பார்த்து மாணவ, மாணவிகள்  தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் விவரங்களை அறிந்து கொண்டனர்.இம்மாவட்டத்தில் பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை செய்துள்ளனர். ஆங்கிலம்-54, கணக்கு 537, அறிவியல்-2923, சமூக அறிவியல்-1562 பேர் பெற்றுள்ளனர். கடந்த கல்வி ஆண்டுகளில் கணக்கு பாடங்களில் தான் அதிகம் பேர் 100 மதிப்பெண்கள் பெற்று வந்தனர். ஆனால், நிகழாண்டில் அறிவியல் பாடத்திலும், அதையடுத்து சமூக அறிவியல் பாடத்திலும் அதிகம் பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.