சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி சாவு

விருதுநகர் அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்த சிவரஞ்சனி-ராமசாமி தம்பதியரின் மகள் எல்லம்மாள்(10). இவர் கடந்த திங்கள்கிழமை இரவு தாயார் வெளியில் சென்றிருந்த சமயத்தில் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:19 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே சமையல் செய்யும் போது மண்ணெண்ணெய் உடலில் சிதறி தீப்பிடித்ததால் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனை சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்த சிவரஞ்சனி-ராமசாமி தம்பதியரின் மகள் எல்லம்மாள்(10). இவர் கடந்த திங்கள்கிழமை இரவு தாயார் வெளியில் சென்றிருந்த சமயத்தில் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தாராம். அப்போது, திடீரென அடுப்பில் இருந்த மண்ணெண்ணெய் சிதறி எல்லம்மாள் உடல் மேல் பட்டு திடீரென தீப்பிடித்தது.பின்னர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் ஓடிவந்து சிறுமியை படுகாயத்துடன் மீட்டனர். அதையடுத்து, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் பலனின்றி காலையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் சிவரஞ்சனி விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.