திருச்சி-நெல்லை சூப்பர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு காலையில் 10.30 மணிக்கு வந்து, 10.32-க்கு புறப்பட்டுச் செல்லும். அதேபோல், திங்கள்கிழமையும் சரியான நேரத்திற்கு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதையடுத்து, 10.32-க்கு புறுப்படும் போது சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தொழில் நுட்ப கோளாறு போன்ற காரணத்தால் சிக்னல் கிடைக்கவில்லை என்பது குறித்து அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதையடுத்து சிக்னலை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.