சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மக்களவை தொகுதியில் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட வைகோ

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வைகோ தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:17 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வைகோ தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

 விருதுநகர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக வேட்பாளராக வைகோ போட்டியிட்டார். அதனால் இத்தொகுதி வி.ஐ.பி அந்தஸ்தை பெற்றது என்பதால் இவரது வெற்றியை உலக தமிழர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இவருக்காக பா.ஜ.காவின் அகிலந்திய தலைவர் ராஜ்நாத் சிங், தமிழருவிமணியன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, தமிழ் ஆர்வலர்கள, வழக்குரைஞர் அணியினர், மாணவரணியினர் உள்ளிட்ட பல்வேறு அணியினர் தீவிர களப்பணியாற்றினர்.

அதனால், இவரது வெற்றியை அனைவரும் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் அதிமுக-26394 வாக்குகளும், திமுக-12779 வாக்குகளும், மதிமுக-11424 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதையடுத்து முதல் மற்றும் இரண்டாவது சுற்றும் சேர்த்து அதிமுக-47,228 வாக்குகளும், திமுக-27361 வாக்குகளும், மதிமுக-24198, காங்கிரஸ்-6340 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், இரண்டு சுற்றிலும் மதிமுக வேட்பாளர் வைகோ மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து 3-வது சுற்று வாக்குகள் எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. இதிலும் அதிமுகவே முன்னணி வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.