சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மக்களவை தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணும் போது திமுக-அதிமுகவினரிடையே பிரச்னை

விருதுநகர் மக்களவை தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் போது கட்டு, கட்டாக இருப்பதாக கூறி திமுக-அதிமுகவினரிடையே பிரச்னை ஏற்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:17 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் போது கட்டு, கட்டாக இருப்பதாக கூறி திமுக-அதிமுகவினரிடையே பிரச்னை ஏற்பட்டது.

இதனால், வாக்கு எண்ணும் பணி சிறிது தாமதமானாது. விருதுநகர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வெள்ளைச்சாமிநாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செந்திக்குமார நாடார் கல்லூரி மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் தபால் வாக்குகள் எண்ணும் பணி காலையில் 8 மணிக்கு தொடங்கியது.
  
அப்போது, தபால் வாக்குகள் கட்டு, கட்டாக இருப்பதாக கூறி திமுகவின் முகவர்கள் வாக்கு எண்ணும் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது. அதையடுத்து அதிகாரிகள் சமரசம் செய்து வைத்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. அதிமுக-திமுகவினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கம் போல் வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.