விருதுநகர் மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
விருதுநகர் மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை காலையில் 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளை பிரித்து எண்ணும் பணி நடந்து வருகிறது.


விருதுநகர் மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை காலையில் 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளை பிரித்து எண்ணும் பணி நடந்து வருகிறது.
விருதுநகர் மக்க்ளவை தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதியை உள்ளடக்கிய தொகுதியாகும். இத்தொகுதியில் ஆண்கள்-6,66,436 வாக்காளர்களும், பெண்கள்-6,79714 வாக்காளர்களும் என மொத்தம் 13,46,238 வாக்காளர்கள் உள்ளனர். இதில், கடந்த 24-ம் தேதி நடந்த மக்களவை தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் 1,86,194 வாக்குகளும், திருமங்கலம்-1,94,479, சாத்தூர்-1,66,667, சிவகாசி-1,66,880, விருதுநகர்-1,43,653, அருப்புக்கோட்டை-1,51,241 என மொத்தம் 10,09,114 வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இத்தொகுதிக்கு உள்பட்ட சட்ட பேரவை தொகுதிகளில் இருந்து வேட்பாளர்கள் முகவர்கள் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, செந்திக்குமார நாடார் கல்லூரி வளாகத்தில் காலை 7 மணி முதல் குவியத் தொடங்கினர்.
இதையடுத்து காலையில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதையடுத்து, ஒவ்வொரு சுற்று வாரியாக வாக்குகள் எண்ணும் பணி நடைபெற இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...