விருதுநகர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வில் 2115 பேர் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப்-1 முதல் நிலைத்தேர்வு நடந்த விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மையத்தில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் அதிகாரிகளுடன் நேரில்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப்-1 முதல் நிலைத்தேர்வு நடந்த விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மையத்தில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இத்தேர்வில் குறைந்த அளவிலேயே தேர்வர்கள் கலந்து கொண்ட நிலையில், 2623 பேர்கள் வரையில் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாவட்டத்தில் இருந்து குரூப்-1 தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 4738 பேர் விண்ணப்பத்திருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 6 மையங்களில் 16 அறைகள் அமைக்கப்பட்டிருந்தது.இத்தேர்வில் பங்கேற்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண், பெண் பட்டதாரிகள் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு முன்பு வந்தனர். குரூப்-1 தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்த மொத்தம் 4738 பேர்களில் 2115 பேர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 2623 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு சென்று வரும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதோடு, தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தேர்வு அறையின் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ மூலம் பதிவு செய்வதற்கும் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில், குரூப்-1 தேர்வு நடந்த மதுரை கச்சேரி சாலையில் உள்ள கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மையத்தில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஜெயவீரபாண்டியன், கதிரவன் உள்ளிட்டோர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...