விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் ஆய்வின் போது இருப்பு குறைவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது தெரியவந்தது. எனவே முறைகேடுகள் செய்த நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு ரூ.117928.50(ஒரு லட்சத்து, பதினேழு ஆயிரத்து, தொள்ளாயிரத்து இருபத்தெட்டு ரூபாய் மற்றும் ஐம்பது காசுகள்) வரையில் அபராதம் விதிக்கப்பட்டது.