சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: ஒருவர் சாவு

சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(45). இவர் சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது, புல்லலக்கோட்டை பிரிவு

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:52 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே 4 வழிச்சாலை பாலத்தில் வேன் மோதிய  விபத்தில் இருசக்கர சக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(45). இவர் சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது, புல்லலக்கோட்டை பிரிவு நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே செல்லும் போது எதிரே மேலூரிலிருந்து-சிவகாசி நோக்கிச் சென்ற வேன் நிலை தடுமாறி இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி அறிந்த போலீஸார் விரைந்து சென்று பாண்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதையடுத்து, இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குடும்பத் தகராறில் ஒருவர் தூக்கிட்டு சாவு: விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் தேரிராஜன்(33). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டில் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த தேரிராஜன் அருகில் சிமெண்ட் ஆலை தொழிலாளர்கள் கூடாரத்திற்கு சென்று தூக்கிட்டு உயிரிழந்தார். இதைப்பார்த்து தேரிராஜன் வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.